Wednesday, 28 March 2018


பாரதியார் படைப்புகளில் தேசிய ஒருமைப்பாடு

தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் ஒரு திருப்புமுனையாக அமைவதற்குக் காரணமானவர் மகாகவி பாரதியாவார். 'இந்திய தேசியக் கவிஞர்களுக்கு , இடையில் திலகம் போன்றவர் பாரதியார்' என்று வினோபா பாவேவால் போற்றப் பெற்றவர். தன் , இனம், தன் மொழி, தன் நாடு என்று மட்டும் சிந்திக்காமல் மற்ற இனங்கள், மொழிகள், நாடுகள் என்று சிந்தித்துக் கவலைப்பட்டு அச்சிந்தனைகளைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் பாரதி. ஆதலால் ‘உலக மகாகவி’ என்றும் ‘தேசியகவி’ அழைக்கப்படுகிறார். அவர் காளியிடம் வேண்டும் போது, ’மண்ணிலார்க்குந் துயரின்றிச் செய்வேன்; வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்; தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீது நிலைபெறச் செய்வேன்’ என்று வேண்டுகிறார். இவ்வாறு இவர்தம் எண்ணற்ற பாடல்களில் தேசிய ஒருமைப்பாட்டு விழுமியங்கள் பெருக்கெடுத்து உள்ளன. ’ஊருக்கு நல்லது சொல்வேன்; உண்மை தெரிந்து  சொல்வேன்’ என்ற மன உறுதி கொண்ட பாரதி தன் உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்.
”மண்ணும் இமயமலை எங்கள் மலையே!
மாநில மீததுபோற் பிறிதில்லையே!
இன்னறு நீர்க் கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே”
          பாரதியின் விடுதலை உணர்வு, தேசிய உணர்வு, பக்தி உணர்வு, பெண்விடுதலை, சீர்திருத்த உணர்வு, ஒற்றுமை உணர்வு போன்றன பாரதியார் படைப்புகளில் தன்னம்பிக்கை நோக்கோடு மிளிர்கிறது.
          எண்ணங்கள் தான் நம்மை வாழவைக்கும். எண்ணங்களில்  உயர்வு இருந்தால்  வாழ்வு சிறக்கும். பாரதியின் ‘எண்ணுவது உயர்வு’ எனும் வைர வரி இதனை உணர்த்துகின்றன. இதைத்தான் வள்ளுவரும் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிறார். உயர்வானவற்றை நினைப்பது மட்டும் போதாது கிடைத்ததை விட்டுவிடக்கூடாது  என்பதை 'கல்வியதை விடேல்'  என்கிறார். எந்த சூழ்நிலையிலும் மனம் நொந்துபோக கூடாது என்றும்  நம்பிக்கை  தருகிறார். 'சிதையா நெஞ்சுகொள்' , 'தோல்வியில் கலங்கேல்' என்ற வரிகளில் எப்பொழுதினும் கலங்கா உள்ளமும், சிதைந்துவிடா மன உறுதியும் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
பொதுவாக பாரதியார் தமது படைப்புகளில் தேச ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளார். அவர் பாரத தேசம் என்ற பாடலில் அக்கருத்தினை முன் வைக்கும் போது,
                             ”சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
                             சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
                             வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
                             மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்”
என்று உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் என்று தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றார். தகவல் தொழில் நுட்பத்த்துறை வளர்ச்சியே உலக மானுடத்தை இணைக்கும் பெருஞ்சக்தி என்பதை உணர்ந்திருந்த பாரதி, விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான அனைத்து அறிவுச் செல்வத்தையும் இந்திய மக்கள் பெற்றாக வேண்டும் என்பதையே இப்பாடல் வழி உணர்த்துகிறார்.
          வறுமை விடாது துரத்திய போதும் சிதையா நெஞ்சு கொண்டு வாழ்ந்தவர் பாரதி. ‘குன்றென நிமிர்ந்து நில்’ புதிய ஆத்திசூடி வரி மனித ஆளுமையில் தான் இந்;த தேசம் பெருமை பெற முடியும், வெற்றியை நாட முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததை விளக்குகிறது.
                   ”தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?”
என்றார் முண்டாசு கவிஞர். துன்பத்தில் மனதைத் தொலைத்து கூற்றுக்கு இரையாகும் சாதாரண வேடிக்கை மனிதரைப் போல் வீழாது தன் எழுத்துத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடச் செய்தவர்.
கல்வி கற்ற வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்போது தான் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக பொருள் தரும். வாழ்க்கையில் பிறரைச் சார்ந்து வாழக் கூடாது என்பதைத் தெளிவுறுத்துவதாய் ‘கைத்தொழில் போற்று’ என்கிறார். அதுவே சில நேரங்களில் ஒற்றுமையாகப் பலர் சேர்ந்து தொழில் செய்தால் பெரும் பொருள் ஈட்டுவதற்கு ஏதுவாக ,ருக்கும் ஆக, கூடித் தொழில் செய்தால் பணத்தைப் பெருக்கலாம் என்கிற ஒற்றுமை உணர்வு வித்தை மனதில் விதைக்கிறார் பாரதியார்.
வங்கப் பிரிவினைக்குப் பின் பக்கிம் சந்திரரால் எழுதப்பட்டது ‘வந்தே மாதரம்’. அப்பாடலால் ஈர்க்கப்பட்ட பாரதி இதனை மொழிபெயர்த்து ‘இந்தியா’ இதழில் பிரசுரித்தார். தேச முழுமைக்கும் பொதுமைப்பாடலாகக் கருதி சில பகுதிகளைக்த் திருத்தம் வெளியிட்டார். ‘வந்தே மாதரம்’ என்பது ஒவ்வொரு இந்திய மக்களின் ‘மந்திரச் சொல்லாக’ இருக்க வேண்டும் என்ற அவசியத்தை இப்பாடலில் உணர்த்திச் செல்கிறார்.
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும்
எப்பதம் வாய்த்திடுமேனும் னம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடி முழுமையும் வாழ்வோம் – வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்”    
இவ்வாறு இந்தியர் அனைவரையும் ஒரு சேர அழைத்து ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் நன்மைகள் ஏற்படும். அதுவே சிறந்த ஞானமும் ஆகும்.
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவன் வாக்கும், ’ஒன்றே குலமும் ஒருவனே தேவன்’ திருமூலர் நோக்கும் தேச நாட்டில் எல்லோரும் சமம் என்பதை முன்னிறுத்துகின்றன. பிறப்பினால் அனைவரும் ஒன்றே; செய்யும் தொழிலினாலே பாகுபடுத்தப்படுகின்றனர் என்கிறார் பாரதியார். சாதிகளும் சாதிப்பிரிவுகளும் இங்கெதற்கு வேண்டும் சாதிப்பாகுபாட்டினால் சண்டையு கூச்சலும் ஏற்பட்டு சமத்துவம்  பறந்தோடிவிடும். ’பாரதம் என்பது ஓர் வீடு’ இங்கு விரிவினைகள் இருக்கக் கூடாது என்று வீறு கொண்டு எழுகிறார். மதத்தாலும் இனத்தாலும் தேசம் பிளவுப்படும் நிலையைத் தம் பாடல்களில் சுட்டிச் செல்கிறார்.
பாரதியார் கீழோர் என்று குறிப்பிடுவது அறிவாலும் வீரத்தாலும் செயலாலும் கீழ்மைத்தனமாக உள்ளவர்களைக் குறிப்பிடுகிறார். அவர்களிடம் இருக்கும் செல்வாக்கைக் கண்டு அஞ்சக்கூடாது. அதேபோல எப்போது தலைநிமிர்ந்து இருக்கவேண்டும் எதற்காகவும் நாய் போல் வாழக்கூடாது தாழ்ந்து போகக் கூடாது கெட்டவர்களுக்குப் பயப்படக் கூடாது மானத்தோடு வாழ வேண்டும். மனிதன் ,ந்தக் கருத்துக்களைப் பின்பற்றினால் எப்போதும் சுய மரியாதையை இழக்கமாட்டான் இவையெல்லாம் நாட்டு மக்களுக்காக மட்டும் கூறியது அல்ல அது போலவே பாரதியாரும் வாழ்ந்து காட்டியவர்.
”அச்சமில்லைஅச்சமில்லைஅச்சமென்பதில்லையே
இச்சகத்துளோரெலாம்எதிர்த்துநின்றபோதினும்,
இச்சைகொண்டேபொருளெலாம்இழந்துவிட்டபோதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”
என்ற வரிகளை வாசிப்பவர்களின் மனதில் ஒரு துணிச்சலும் தன்னம்பிக்கையும் பிறப்பது உறுதி. விரும்பிய பொருளெல்லாம் இல்லாது வெறுமையாய் நின்றாலும் அச்சமில்லாது துணிவோடு இருக்க வேண்டும் என்னும் நம்பிக்கையை இப்பாடல் வரிகள் விதைக்கின்றன.
                   “முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
                             முழுமைக்கும் பொதுஉடைமை
                   ஓப்பிலாத சமுதாயம்
                             உலகத் துக்கொரு புதுமை”
என்று பொதுவுடைமைச் சிந்தனைகளை வேரூன்றச் செய்தவர் பாரதி. ‘தேசத்தைக் காத்தல் செய்’ என்ற பாரதியின் புதிய சிந்தனை அவர்தம் தேசப்பற்றை நன்கு விளக்குகின்றது.
பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ள உதவுகின்றன; ஒற்றுமை உணர்வை உண்டாக்குகின்றன; விழிப்புணர்வு கொடுக்கின்றன; நேர்வழியில் செல்வதற்கு வேண்டிய உத்வேகத்தை  அளிக்கின்றன;  துன்பமும் தடுமாற்றமும் நிறைந்த இந்த மனித வாழ்க்கையில் நம் தேசத்தைச் சரியான திசையிலும் முறையான பாதையிலும் வழி நடத்திச் செல்ல உதவுகின்றன.
                     


பாரதியார் புதிய ஆத்திசூடியில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்


பாரதியார் புதிய ஆத்திசூடியில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் ஒரு திருப்புமுனையாக அமைவதற்குக் காரணமானவர் மகாகவி பாரதியாவார். தன் இனம், தன் மொழி, தன் நாடு என்று மட்டும் சிந்திக்காமல் மற்ற இனங்கள், மொழிகள், நாடுகள் என்று சிந்தித்துக் கவலைப்பட்டு அச் சிந்தனைகளையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் பாரதி. ஆதலால் உலக மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். 'இந்திய தேசியக் கவிஞர்களுக்கு இடையில் திலகம் போன்றவர் பாரதியார்' என்றும் வினோபா பாவேவால் போற்றப் பெற்றவர். அவர்தம் படைப்புகளில் தன்னம்பிக்கையூட்டும் சிந்தனை விழுமியங்கள் பெருக்கெடுத்து உள்ளன. ஊருக்கு நல்லது சொல்வேன்; உண்மை தெரிந்து  சொல்வேன்என்ற மன உறுதி கொண்ட பாரதி தன் உள்ளத்து உணர்வுகளை கவிதைகளில் வெளிப்படுத்துகிறார்.
            அற இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகிறது  ஆத்திசூடி. நீதிக்கருத்துக்களை மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு எழுதப்பட்டதே இந்நூல். இந்நூலுக்கு வித்திட்டவர் ஒளவையார். ஒளவையார் நூலிலும் தன்னம்பிக்கை உணர்வு சிந்தனைகள் வெளிப்படுவதை நிரம்பக் காணலாம். பாரதியின் விடுதலை உணர்வு, தேசிய உணர்வு, பக்தி உணர்வு, பெண்விடுதலை, சீர்திருத்த உணர்வு, ஆளுமைத்திறம் போன்றன பாரதியார் புதிய ஆத்திசூடியிலும் தன்னம்பிக்கை நோக்கோடு மிளிர்கிறது. தையலை உயர்வு சொல், எண்ணுவது உயர்வு, குன்றென நிமிர்ந்து நில், கைத்தொழில் போற்று, சரித்திரத் தேர்ச்சி கொள் என்ற ஐந்து தன்னம்பிக்கை வரிகளும் பாரதியார் கவிதைகளில் இழையோடி இருப்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். இவை போன்று புதிய ஆத்திச்சூடியின் 110 வரிகள் கருத்துக்களையும் அவர்தம் கவிதைகளில் ஒப்பிட்டு நோக்கலாம்.
தையலை உயர்வு செய்
            ’பெண் இயற்கையிலேயே அறிவு படைத்தவள்; பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் இறைவன்என்றான் மகாகவி.  இங்கு பெண் அறிவும், ஞானமும் பெற்றவளாகிறாள் என்ற கவியின் கருத்து முன்வைக்கப்படுகிறது. மேலும், குடும்பத்திலுள்ள அனைத்து வேலைகளையும் செய்து குடும்பத்தைக் கட்டிக் காப்பவளாக பெண் திகழ்கிறாள். துன்பம் தீர்வதும் பெண்மையினால்தான். நல்லொழுக்கமும், தீமைகளின் அழிவும் பெண்ணினாலே ஏற்படும். பெண்களின் கடைக்கண் பார்வைப்பட்டால் காற்றிலேறி விண்ணையும் சாட முடியும். இதனை,
                        ”துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
                        . . . .   . . .
                        கலிய ழிப்பது பெண்க ளறமடா!
                        . . .   . . .
                        காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
                        காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே

என்கிற வரிகள் தெளிவுப்படுத்துகின்றன. ஆக, பெண்ணின் துணையிருந்தால் துன்பத்திலிருந்து விடுபட்டு அனைத்தையும் சாதிக்க முடியும்.  இத்தகு பெண்ணை உயர்வு செய் என்கிறார் பாரதி. இவ்வரி பெண்ணின் உயர்வை மட்டும் வெளிப்படுத்தாது அப்பெண்களுக்குத் தன்னம்பிக்கைதனையும் ஊட்டுவதாய் அமைந்துள்ளது.
எண்ணுவது உயர்வு:
            எண்ணங்கள் தான் நம்மை வாழவைக்கும். எண்ணங்களில்  உயர்வு இருந்தால்  வாழ்வு சிறக்கும். இதைத்தான் வள்ளுவரும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்என்கிறார். உயர்வானவற்றை நினைப்பது மட்டும் போதாது கிடைத்ததை விட்டுவிடக்கூடாது என்பதை 'கல்வியதை விடேல்என்கிறார். எந்த சூழ்நிலையிலும் மனம் நொந்துபோக கூடாது என்றும் நம்பிக்கை தருகிறார். 'சிதையா நெஞ்சுகொள்' , 'தோல்வியில் கலங்கேல்' என்ற வரிகளில் எப்பொழுதினும் கலங்கா உள்ளமும், சிதைந்துவிடா மன உறுதியும் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
பொதுவாக பாரதியார் தமது படைப்புகளில் ஆளுமைப் பண்பை எடுத்துக் காட்டியுள்ளார். அது போலவே புதிய ஆத்திச்சூடியில் வளரும் தலைமுறைக்கான தன்னம்பிக்கைச் சிந்தனையாக மிளிர்கிறது. அவர் பாரத தேசம் என்ற பாடலில் அக்கத்தினை முன் வைக்கிறார்.
                                    சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
                                    சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
                                    வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
                                    மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் என்று தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றார். தகவல் தொழில் நுட்பத்த்துறை வளர்ச்சியே உலக மானுடத்தை இணைக்கும் பெருஞ்சக்தி என்பதை உணர்ந்திருந்த பாரதி, விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான அனைத்து அறிவுச் செல்வத்தையும் இந்திய மக்கள் பெற்றாக வேண்டும் என்பதையே இப்பாடல் வழி உணர்த்துகிறார்.
குன்றென நிமிர்ந்து நில்
            வறுமை விடாது துரத்திய போதும் சிதையா நெஞ்சு கொண்டு வாழ்ந்தவர் பாரதி. தனிமனித ஆளுமையில் தான் இந்த்த் தேசம் பெருமை பெற முடியும், வெற்றியை நாட முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததை,
                        மனதில் உறுதி வேண்டும்
                        வாக்கினிலே இனிமை வேண்டும்
                        கனவு மெய்ப்பட வேண்டும்
                        கைவசமாவது விரைவில் வேண்டும்
என்று பராசக்தியிடம் வேண்டுவதைக் காண்முடிகிறது.
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
என்றார் முண்டாசு கவிஞர். துன்பத்தில் மனதைத் தொலைத்து கூற்றுக்கு இரையாகும் சாதாரண வேடிக்கை மனிதரைப் போல் வீழாது தன் எழுத்துத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடச் செய்தவர்.
கைத்தொழில் போற்று
கல்வி கற்ற வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்போது தான் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக பொருள் தரும். வாழ்க்கையில் பிறரைச் சார்ந்து வாழக் கூடாது என்பதைத் தெளிவுறுத்துவதாய் கைத்தொழில் போற்றுஎன்கிறார். அதுவே சில நேரங்களில் ஒற்றுமையாகப் பலர் சேர்ந்து தொழில் செய்தால் பெரும் பொருள் ஈட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் பணத்தைச் சேர்க்க வேண்டும்.
                         நாளெல்லாம் வினை செய்
                         பணத்தினைப் பெருக்கு
என்று தன்னம்பிக்கைச் சிந்தனைகளை முன்வைக்கிறார். ஆக, கூடித் தொழில் செய்தால் பணத்தைப் பெருக்கலாம் என்கிற தன்னம்பிக்கை விதையை மனதில் விதைக்கிறார் பாரதியார்.
சரித்திரத் தேர்ச்சி கொள்
எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல முறையான வாழ்க்கையை வாழ வேண்டும். கோழைத்தனமாக தன் மரியாதையை இழந்து வாழ்வதை விரும்பாத பாரதியார் ஆத்திச்சூடியில் தன்னம்பிக்கைக் கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளார்.
பாரதியார் கீழோர் என்று குறிப்பிடுவது அறிவாலும் வீரத்தாலும் செயலாலும் கீழ்மைத்தனமாக உள்ளவர்களைக் குறிப்பிடுகிறார். அவர்களிடம் இருக்கும் செல்வாக்கைக் கண்டு அஞ்சக்கூடாது. அதேபோல எப்போது தலைநிமிர்ந்து இருக்கவேண்டும் எதற்காகவும் நாய் போல் வாழக்கூடாது தாழ்ந்து போகக் கூடாது கெட்டவர்களுக்குப் பயப்படக் கூடாது மானத்தோடு வாழ வேண்டும். மனிதன் இந்தக் கருத்துக்களைப் பின்பற்றினால் எப்போதும் சுய மரியாதையை இழக்கமாட்டான் இவையெல்லாம் நாட்டு மக்களுக்காக மட்டும் கூறியது அல்ல அது போலவே பாரதியாரும் வாழ்ந்து காட்டியவர்.
அச்சமில்லைஅச்சமில்லைஅச்சமென்பதில்லையே
இச்சகத்துளோரெலாம்எதிர்த்துநின்றபோதினும்,
இச்சைகொண்டேபொருளெலாம்இழந்துவிட்டபோதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
     என்ற வரிகளை வாசிப்பவர்களின் மனதில் ஒரு துணிச்சலும் தன்னம்பிக்கையிம் பிறப்பது உறுதி. விரும்பிய பொருளெல்லாம் இல்லாது வெறுமையாய் நின்றாலும் அச்சமில்லாது துணிவோடு இருக்க வேண்டும் என்னும் நம்பிக்கையை இப்பாடல் வரிகள் விதைக்கின்றன.      
  பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ள உதவுகின்றன. விழிப்புணர்வு கொடுக்கின்றன. நேர்வழியில் செல்வதற்கு வேண்டிய உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும்  அளிக்கின்றன.  துன்பமும் தடுமாற்றமும் நிறைந்த இந்த மனித வாழ்க்கையில் நம் மைந்தர்களை சரியாக திசையிலும் முறையான பாதையிலும் வழி நடத்திச் செல்கின்றன.

                      

Monday, 3 April 2017

தமிழியல் வளர்ச்சிக்குத் ‘தமிழ் மாருதத்’தின் பங்களிப்பு

தமிழியல் வளர்ச்சிக்குத்தமிழ் மாருதத்தின் பங்களிப்பு
       தமிழ்வழிக் கல்வி குறித்துத் தமிழக அரசுக்கு வேண்டுகோளாகப் பத்துத் திட்டங்களை முன் வைக்கிறார்இதுவே தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும், தமிழ் இனத்திற்கும் செய்யும் தொண்டாக அமையும் என்பது ஆசிரியரின் நோக்கமாகும்.
       “தமிழ்வழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி” – தேசிய கவி பாரதியார், “எங்கும் தமிழ், எதிலும் தமிழெல்லாம் தமிழ்” – அறிஞர் அண்ணா முழக்கம் இவர்களின் கனவு நினைவாகத்தமிழ்வழிக் கல்வித் திட்டத்”தை உடனடியாகச் செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டும்அதற்குரிய பத்துத் திட்டங்கள்:
1.    ஒருவர், ஆங்கிலம், இந்தி, வடமொழி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எத்தனை மொழிகளையும் படித்துக் கொள்ளலாம்ஆனால் கல்வி மட்டும் தமிழ் வழியாகவே இருக்க வேண்டும்.
2.   தமிழ் நாட்டில்தமிழ்கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும்.
3.   தமிழை முதன் மொழியாகவும், விரும்பிய வேறு ஒன்றை இரண்டாம் மொழியாகவும் கற்கும் நிலை வேண்டும்.
4.   தமிழ்வழிக் கல்விஎன்ற நிலை இருந்தால், காரியாப்பட்டிக் கறுப்பணனும், கல்வி கற்றுப் பொறியியல் அறிஞராக, மருத்துவ மேதையாக வரமுடியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பீடத்தில் இருப்போர், அந்த மக்களுக்கு உண்மையான நன்மை செய்ய வேண்டுமெனில் இதுவே வழி!
5.   வேண்டுவோர் தமிழ்க் கல்வி கற்கலாம்; ஏனையோர் ஆங்கில வழிக் கல்வி என்ற இரு நிலை அறவே அகற்றப்பட வேண்டும்ஆங்கில வழியேதான் கற்போம் என்போர், பெரும் வசதி படைத்தவர்களாகவே இருப்பர்அவர்கள் இத்தகைய கல்வியை வெளிநாட்டிற்குச் சென்று பெறலாமே?
6.   தமிழ்வழிக் கல்விஎன்றதும், முழுவதுமே தமிழ் இலக்கியம் போலும் என்று தவறாக எண்ணிவிடுகின்றனர்தமிழ்க் கல்வி வேறு தமிழ்வழிக் கல்வி வேறு என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
7.   வேறு சிலர், தமிழ்வழிக் கல்வி வந்தால், தமது வேலை போய்விடுமே என்று அஞ்சகின்றனர்பொருளாதாரம், வரலாறு, அறிவியல், புவியியல், கணிதம் போன்ற பாடங்களை எந்தத் தமிழாசிரியரும் நடத்தப் போவதில்லைஅந்தந்தத் துறை ஆசிரியர்கள்தாம் நடத்த முடியும்.
8.   தமிழ்வழிக் கல்வி கற்றவர்க்கே தமிழகத்தில் வேலை வாய்ப்பில் முதலிடம் என்று அரசு ஆணை பிறப்பித்தால் போதும், உடனடியாகவே மாணவர்கள் இதில் சேர முந்துவர்.
9.   தமிழ்வழிக் கல்வி எனின் நூல்கள் இல்லை என்பர் சிலர்இப்போது நிறைய நூல்கள் வந்து விட்டனஅரசு நினைத்தால் ஆகாதது உண்டோ? அறிஞர் குழு அமைத்து உடனடியாகச் செயல்படுத்தலாமே?
10.  தமிழில் கலைச்சொல் இல்லையே என்பர் சிலர்இருப்பதையே பயன்படுத்துவோம்இல்லாவிடில் தமிழ் வரி வடிவத்திலேயே அத்தகைய சொற்களை ஏற்போம்காலம் செல்லச் செல்ல இயல்பாகவே நல்ல கலைச்சொல் வந்துவிடும்.5
மேலும், ‘தமிழ்வழிக் கல்வியை மேல் நிலையிலிருந்து அதாவதுமருத்துவம், பொறியியல்போன்ற உயர்மட்ட வகுப்பிலிருந்து தொடங்க வேண்டும்அப்போதுதான் +2பயில இருக்கும் மாணவருக்குத்தமிழ்வழிக் கல்விகற்க விருப்பம் உண்டாகும்.
தமிழ்வழிக் கல்விக்கு நல்ல தமிழில் பாட நூல்கள் இல்லை என்று கவலைப்படாமல், தொடக்க நிலையில் நல்ல தமிழ்ச் சொல் இல்லாவிடினும், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் வழி வடிவத்தில் எழுதலாம்காலப் போக்கில் நல்ல தம்ழ்ச் சொற்கள் தாமாகவே உருவாகிவிடும்.
தமிழ்வழிக் கல்விகற்ற மாணவர்கட்குத் தமிழகத்து வேலை வாய்ப்பில் முதன்மை தருதல் வேண்டும்.
தமிழ்வழிக் கல்விஎன்றதும் ஆங்கிலம் போன்ற மொழிகளை அறவே நீக்குதல் என்று கருதிவிடலாகாதுதமிழ் வழிக் கல்வியில் சேர்வோர், தாம் விரும்பும், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தம் விருப்ப மொழியாகக் கற்க வகை செய்தல் வேண்டும்6
இவ்வாறு தமிழ்வழிக் கல்வித் திட்டம் குறித்து ஆசிரியர் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைக் காணமுடிகிறது.
பெற்ற விருதுகளும் பரிசுகளும்
       இதழாசிரியர் சாம்பசிவனார் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.  இவை தமிழுக்காக அவர் ஆற்றிய பணிகளுக்காக் கிடைத்தவையாகும்.  அவற்றுள் ஒருசில வருமாறு:
1.        1970இல் மதுரைத் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில், சிவனார் செய்து வரும் தமிழ்த் தொண்டுக்காகத் தமிழவேள் பி.டி. இராசனார் பொன்னாடை போர்த்திப் பாராட்டியமை.
2.        1954இல் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூலை அரிதின் முயன்று உருவாக்கி வெளியிட்டமைக்காகச் ‘செந்தமிழ்ச் செல்வர்‘ எனும் பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றமை.  பட்டம் வழங்கியவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்.
3.        தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமது குருபூசை விழாவில் ‘தமிழாகரர்‘ எனும் பட்டமும் பொற்பதக்கமும்; பொன்னாடையும் நல்கிப் பாராட்டு (1985) அளித்தமை.
4.        சென்னையில் டாக்டர் திருமதி லலிதா காமேசுவரனும் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய ‘நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி’‘ (சிவனாரின் முனைவர் பட்ட ஆய்வேடு) எனும் நூல் வெளியீட்டு விழாவினை நடத்தல்.  சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டுச் சென்னை நல்வாழ்வு மன்றச் சார்பில் ‘அருந்தமிழ் மாமணி‘ எனும் பட்டம் வழங்கல்;  விழாவில் சிவனாருக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டியவர் மாண்புமிகு கல்வியமைச்சர் இரா. நெடுஞ்செழியன் (21-06-1986).
5.        தமிழ்த் தொண்டுக்காகச் சென்னை வி.ஜி.பி. நிறுவனத்தாரின் பாராட்டுதங்கக் கடற்கரை விழா.  தமலைமை – சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் பொற்கிழி ரூ.1000 பரிசு, பொன்னாடை (1987).
6.        சென்னை உரத்த சிந்தனையில் பாராட்டு; விக்ரமன் பரிசு ரூ.1000 (02.05.1998).
7.        தமிழ்த் தொண்டிற்காக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் மிக உயர்ந்த மாட்சிமைப் பரிசினை வழங்கல்.  250 அமெரிக்கன் டாலர், கேடயம் ஆகியவற்றை முனைவர் தமிழண்ணல் தலைமையில் வழங்கல் (1998).
8.        மதுரைத் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவின் போது (27-11-1998) பி.டி.ஆர். கமலைத் தியாகராசன் தலைமையில் ‘தமிழ்ச் செம்மல்‘ பட்டம்.
9.        காஞ்சி காமகோடி பீடம் ஜெயேந்திர சுவாமிகள், ஸ்வர்ண ஜயந்தி விழா, சென்னை சைவ சித்தாந்த அறிஞர் 50 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொன்னாடையும் ரூ.10,000 பணமுடிப்பும் நல்கப் பெற்றமை (18.01.2004).
10.     திருக்குறள் தொண்டிற்காகத் திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் 26-02-2005இல் ‘திருக்குறள் செம்மல்‘ பட்டமும் பொன்னாடையும் ரூ.3000 பணமுடிப்பும் வழங்கல், மேலும், விழாவில் ‘ஆள்வினையும் ஊழ்வினையும்’‘ எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியமை.
11.     பழ. நெடுமாறனும் அவரின் தம்பியரும் சேர்ந்து, சிவனார் எழுதிய ‘அறநெறியண்ணல் கி.ப. வாழ்க்கை வரலாறு’‘ நூலைச் சிறப்பாக வெளியிட்டு (2005) அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பரிசுகளும் வழங்கினர்.
12.     சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பண்பாட்டுத் தூதரகம், அமெரிக்கா மதுரையில் 08.12.2007 அன்று நிகழ்த்திய பல்துறைச் சாதனையாளர் பட்டமளிப்பு விழாவில் ‘மதிப்புறு முனைவர்‘ (D.Litt) பட்டம் நல்கல்.
13.     ‘இலக்கிய இணைர் பேரா. இரா. மோகன் – நிர்மலா மோகன் மணிவிழா மலர்‘ வௌயீட்டு விழா மதுரையில் 11.09.2010 அன்று நிகழ்ந்தது.  விழாவில் முனைவர் ச. சாம்பசிவனாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’‘ம் ரூ.5000 பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
14.     ‘சிவனாரின் முத்து விழா மலர்‘ வெளியீட்டு விழா மதுரையில் 16-01-2011 ஞாயிறன்று நிகழ்ந்தது.  விழாவில், ‘சிவனாரின் முத்து விழா மலர்‘ மற்றும் ‘சிந்தனைச் செழுந்தேன்‘ ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன.
       மதுரைத் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவின் போது (27-11-1998) பி.டி.ஆர். கமலைத் தியாகராசன் தலைமையில் ‘தமிழ்ச் செம்மல்‘ பட்டம் பெற்ற சிவனாருக்கு தெ. முருகசாமி பாடிய வாழ்த்துப் பாமாலை:
                “மதுரைத் தமிழ்ச் சங்க
              மாவயலின் தமிழ்நாத்து!
       மதுரைப் பல்கலையாம்
              மாக்கடலின் தமிழ்முத்து!
       மாதமாய் வீசுகின்ற
              மாருதமாம் தமிழ்த்தென்றல்!
       ஏதமே அறியாத
              ஏற்றமிகு சாம்பசிவர்!
       நாவலராம் ச.சோ.
              பாரதியின் நற்றொண்டர்!
       காவலராம் கன்னித்
              தமிழ்த்தெய்வப் பூசாதி!
       பாவலராய்ப் பைந்தமிழ்ப்
              பாட்டெழுதும் பாட்டாளி!
       நாவலராய்ப் பேசும்
              தமிழ்ச்சான்றோர் கூட்டாளி!
       அத்தகு சிறந்தோரின்
                அன்னைத்தமிழ்த் தொண்டிற்காய்
        மொத்தபுகழ் மீனாட்சித்
                திருக்கோயில் வளாகத்து
        வள்ளுவர் கழகத்தில்
              வளமான பாராட்டை
       உள்ளி எடுக்கின்றார்
              உயிர்விழா வாழ்கவாழ்க!””
                           வெண்பா
       தண்டமிழ்த் தொண்டால் தமிழ்த்தழும் பேறிய
       தண்டமிழ்ச் சாம்ப சிவ
       சான்றோர் மனமாரப் பாராட்டச்
                சாருதே இன்னும் சிறப்பு!”?
என்று ச. சாம்பசிவனாருக்குப் பாராட்டு விழா வாழ்த்துப் பாடியுள்ளார் தெ. முருகசாமி.
தமிழக அரசின் பாராட்டு
       சிவனாரின் தமிழ்த் தொண்டினைத் தமிழக அரசும் பாராட்டத் தவறவில்லை.
1.    முனைவர் ச. சாம்பசிவனாரின் மகளுக்கு டாக்டர் ல்லிதா காமேசுவரனின் முயற்சியால் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றமைஇடம் அளித்த பெருமை மாண்புமிகு புரட்சித் தலைவரைச் சாரும்.
2.   மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் 05-03-1989 இல் பல்கலைக்கழக ஆசிரியர்களில் நல்லாசிரியர் விருது வழங்கியமை.
3.   மாண்புமிகு செ. அரங்கநாயகம் 1993இல், தமிழ் வளர்ச்சி இயக்க்கத்தின் சார்பில்வளர்தமிழ் ஆர்வலர்பட்டமும் பரிசும் நல்கியமை.
சிவனாரின் கல்வித்துறைப் பாட நூல்கள்
1.    1963இல் சென்னை மாநிலம் முழுமைக்கும் சிவனாரின்பயன்பட வாழ்ந்த பெரியார்என்னும் நூல் பள்ளியிறுதி பயிலும் மாணாக்கர்களுக்குத் துணைப் பாடமாக அமைதல்.
2.   தமிழக அரசால் பதின்ம (அயவசஉ) பயிலும் மாணவர்களுக்குச் சிவனாரின்தமிழவேள் உமாமகேசுவரனார்என்னும் நூல் பாட நூலாகப் பரிந்துரைக்கப்பெறல்.
3.   மதுரை காமராசர் பல்கலைக்கழகப் புகமுக வகுப்புக்குச் சிவனாரின்தமிழவேள் உமாமகேசுவரனார்’ – பாடநூல் ஆதல்.
4.   1984 -85ஆம் ஆண்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சிப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பாடமாகச் சிவனாரின்மேகலை நாடகம்பரிந்துரைக்கப்பெறல்.
5.   1987இல் கேரளாகள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பாடமாகச் சிவனாரின்புகழின் காயம்என்னும் நூல் பரிந்துரைக்கப்பெறல்.
6.   1994 முதல் 1998 வரை மேற்கண்ட பல்கலைக்கழகங்களில்பஞ்சுபடா நூல்என்னும் நூல் பாடமாக வைக்கப் பெறல்.
கல்வி ஆசிரியர், இதழாசிரியர், அய்வு நெறியாளர், தமிழ்த் தொண்டர் எனத் தம் பணிகளைத் திறம்படச் செய்துவரும் சிவனார் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட ஓர் ஆளுமையாளர்.
கவிதைகள்
       கவிஞன் தனக்குள் இருக்கு மன உணர்வுகளைக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறான்அக்கவிதைகள் மனத்தில் நிலைத்து நிற்க,
       நம்தமிழில் கவிதைகள் புனைய வேண்டும்!
            நாட்டாரும் மதிக்கும்படி செய்தல் வேண்டும்!
      நம்தமிழ்நா டுலகத்தில் சிறந்து நிற்க
            நம்மாலே அனமட்டும் செய்ய வேண்டும்!
      நம்மவரைக் கண்டுபிறர் போற்ற வேண்டும்!
            நம்முன்னோர் வீரமதைக் கொள்ள வேண்டும்!
      நம்மாலே பிறர்க்குதவி வேண்டும் என்றால்
            நாமாக முந்திநின்று முடித்தல் வேண்டும்!”1
பிறநாட்டினரும் மதிக்கத்தக்க வகையில் தாய்மொழியில் கவிதை எழுத வேண்டும்; உலகத்திலேயே தலைசிறந்த நாடகத் தமிழ்நாடு திகழ்வதற்காக வகை செய்ய வேண்டும் என்று சாம்பசிவனார் கூறகிறார்அந்த வகையில் தமிழ், தமிழ்நாடு, தமிழர் என்ற அடிப்படையில்தமிழ் மாருதத்தில் வெளியான மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் இவ்வியலில் ஆய்வ செய்யப்படுகின்றன.
மரபுக் கவிதைகள்
       ‘தமிழ் மாருதம்இதழில் வெளிவந்த மரபுக் கவிதைகளின் விளக்கம், ‘தமிழ் மாருதம்இதழில் மரபுக் கவிதை என்றவாறு பகுக்கப்பட்டள்ளது.
மரபுக் கவிதைவிளக்கம்
       தொன்றுதொட்டு வரும் தன்மையுடையது என்பதைமரபுஎன்னும் சொல் உணர்த்தி நிற்கின்றது என்பர்தமிழ் யாப்பிலக்கணத்துக்கு உட்படாத வசன கவிதை, தொடக்க காலத்தில்புதுக் கவிதைஎன்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அதுவேகவிதைஎன்றாகிப்போனதுகாவியமாக / செய்யுளாக இருந்த தமிழ் கிறித்தவர் வருகையினாலே உரைநடை இலக்கியமாக மாறியது.
       பாடு பொருளும் உத்திகளும் புதியனவாயினும் மரபு இலக்கணத்தின்படி படைக்கப்படுதலின் இவைமரபுக் கவிதைஎனப்படுகின்றனசங்க இலக்கியம், காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள் என யாவும் மரபுக் கவிதைகளால் ஆனவையே ஆகும்.
       தொன்று நிகழ்ந்த்து அனைத்தும் உணர்த்திடு
            சூழ்கலை வாணர்களும்இவள்
      என்று பிறந்தவள் என்றுண ராத
            இயல்பின ளாமெங்கள் தாய்2
எனப் பாரதியார் படும் பாடல்மரபுக் கவிதையின் காலத் தொன்மைக்கும் பொருந்தக் கூடியதாக விளங்குகிறது.  யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதைமரபுக் கவிதைஆயிற்று, சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடையது மரபுக் கவிதைபாக்களையடுத்துப் பாவினங்களம், அவற்றை யடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றினஇவ்வாறுதான் பாடப்பட வேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத வடிவமாகப் பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
       ‘தமிழ் மாருதம்இதழில் சாம்பசிவனார் எழுதி வெளிவந்த தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனம் எனத் தமிழ்மொழிப் பற்றுமிக்க கவிதைகள், வாழ்த்துப் பாக்கள் பெரும்பாலும் வெண்பா இலக்கணத்தில் புனையப் பெறுகின்றன.
       மொழியியல் அறிஞரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவருமான கி. கருணாகரன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அமர்த்தப் பெற்றுள்ள செய்தி அறிந்து அவருக்கு வாழ்த்துப் பா ஒன்றைப் பாடினார் சிவனார்அப் பா வருமாறு:
                கருணா கரனென்னும் கன்னித் தமிழர்
       பெருமைத் துணைவேந்தர் பேர்துலங்க வந்தார்!
       தஞ்சைக் கழகம் தரணிப் புகழ்பெற
       நெஞ்சாரப் போற்றுவம் நீடு!”3
      தமிழண்ணல்குறள் பீடத்தின் துணைத் தலைவராக அமர்த்தப் பெற்ற செய்தியறிந்து அவர்தம் தொண்டு சிறக்கச் சிவனார் வாழ்த்திய வெண்பா இது:
                தமிழண்ணல் ஆற்றிவரும் தண்டமிழ்த் தொண்டு
      இமிழ்கடல்சூழ் இப்புவியில் என்றும் நிலைத்திருக்கும்
நல்ல தமிழறிஞர் நாடுபோற்றும் நற்கலைஞர்
உள்ளுவம் என்றும் உவந்து4
தமிழறிஞர், நற்கலைஞர் என நாடு போற்றும் தமிழண்ணலின் தமிழ்த் தொண்டு இவ்வுலகில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று இதில் வாழ்த்துக் கூறப்பட்டுள்ளது.
அகவை அறுபத்து ஆறில் அடியெடுத்து வைக்கும் இடிமுரசாருக்குச் சிவனார் பாடிய பிறந்தநாள் வாழ்த்து வெண்பா:
ஆண்டு அறுபத்து ஆறில் அடிவைக்கும்
காண்டகு நற்கவிஞர் கன்னித் தமிழ்க்கலைஞர்
இன்னும்பல் லாண்டு இனிதே முரசியம்ப
என்றும் சிறக்க இனிது!”6
எழுபத்தாறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கலைஞரைக்காண்டகு கலைஞர் வாழ்க! கணினியைக் கொணர்க!’ என்று சிவனார் பின்வருமாறு வாழ்த்துகின்றார் :
தெள்ளுற்ற தீந்தமிழில் நேர்ந்தநற் கீர்த்திகொண்டு
வள்ளுவர் பேர்துலங்க வான்புகழ்க் கோட்டமிங்குக்
கண்டிட்டார் நம்கலைஞர் காலமெல்லாம் வாழ்ந்திடுக!
என்றிசிப்போம் எக்காளம் இட்டு
அண்ணாவுக் கோர்தம்பி ஆற்றல்சேர் நல்நம்பி!
கண்ணான செந்தமிழைக் காப்பதற்கே தோன்றியவர்!
சொன்னாலும் நாமணர்க்கும் கேட்டாலும் காதினிக்கும்
எந்நாளும் வாழ்கவென ஏத்து!”7
       எழுபத்து இரண்டாம் அகவை காணும் மா. செங்குட்டுவனார் வாழ்க! என வாழ்த்துக் கூறும் சிவனாரின் வாழ்த்துப்பா :
                செங்குட் டுவனொரு செந்தமிழ்க் காப்பாளர்
      இங்கண் பலதொண்டு ஈடில் புகழ்சாற்றும்!
      தெய்வத் திருக்குறள்போல் தித்திக்கும் நல்வாழ்க்கை
மெய்யாய்ப் பெறுக மகிழ்ந்து9
தொல்காப்பியம்முதலான பழந்தமிழ் இலக்கண நூல்களில் பழுத்த புலமை படைத்த ஆ. சிவலிங்கனாருக்கு, அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளைப் பரிசு வழங்கப் பெறுவது குறித்துச் சிவனார் பாடிய வாழ்த்துப் பாடல் வருமாறு :
மயிலம் சிவலிங்கம் மாண்பார் புலவர்
அயில்வேல் முருகன் அடியினைப் போற்றும்
பெருமை உடையவர் பெற்றி சொலற்கரிது!
என்றும் சிறக்க இனிது!”11
வெளிநாட்டுத் தமிழர்களுக்குச் சிறப்பிடம் தருவதுதமிழ் மாருதம்இதழின் தனிச்சிறப்பு அவ்வகையில், இல்லினாய்சில் உள்ள, ‘உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநர், ‘தமிழ் மாருதத்தின் வாழ்நாள் உறுப்பினர் அழ. இராம்மோகன்அவர்தம் துணைவியர் (திருமதி) மீனாட்சி இராம்மோகன் ஆகியோரின்மணிவிழாவாழ்த்துப்பா இதழில் வெளிவந்துள்ளது.
                     ஆசிரிய விருத்தம்
தமிழனுக்குச் சூடில்லை சொரனை யில்லை!
      தமிழன்தான் என்றதொரு நினைவும் இல்லை!
தமிழனுக்குத் தன்மான உணர்வும் இல்லை!
      தக்கபடி செய்வதற்குத் துணிவும் இல்லை!
தமிழனிவன் தன்நாட்டில் வாழ்வ தற்குத்
      தன்னினமே வகையேதும் செய்ய வில்லை!
தமிழன்தன் சாண்வயிறு கழுவு தற்குத்
      தன்நாடு விட்டேகிச் சென்றா னன்றோ! (1)
என்று தாய்நாட்டை விட்டு வெளிநாடு சென்ற தமிழனைச் சாடுகிறார் ஆசிரியர்.
       ‘குறள்பீட விருதுபெற்ற அ.. ஞானசம்பந்தனை வாழ்த்திப் பாடப்பெற்ற வெண்பா:
                வள்ளுவர் காட்டும் வழியிலே வாழ்கின்ற
      தெள்ளுதமிழ்ப் பேர்ரறிஞர் தேர்ந்த கலைஞராம்
      ஞாலம் சிறக்கவே ஞானசம் பந்தனார்
      காலமெலாம் வாழ்க கனிந்து26 
      இத்தகு சிறப்புக்கு உரிமையுடையோர்மூதறிஞர்’, ‘முத்தமிழ்க் காவலர்கி..பெ. விசுவநாதம் ஒருவரேதம் 96ஆம் வயதில் உயிர் நீத்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் சிவனார் பாடிய இரங்கற்பா :
                முத்தமிழன் காவலரே! முத்தமிழ்ச் செல்வரே! நீர்
      இத்தரைவிட் டேகினீர் என்றிட்டார்! – அத்தாவே!
      விண்ணொடும் தீந்தமிழை வேதம்போல் பாடிடவே
நண்ணினீர் என்றிடுவேன் நன்று!”28
       மொழி, இனப்பற்றுடைய கலைஞர், தமிழின் தொன்மையைப் பின்வரும் வரிகளில் விளக்குகிறார்.
       பகைவர்க்குத் தாழாமல் படைகண்டு வீழாமல்
      பல்லூழி வாழ்கின்ற தமிழ்29
       தமிழ்வழிக் கல்வியைக் கொணரக் கவிதை மூலம் தமிழக முதல்வர் கலைஞருக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறார் சிவனார்.
       தமிழ்வழியே கல்விதனைக் கொணர வேண்டும்!
            தமிழர்களே விழிப்புணர்வு கொள்ள வேண்டும்!
      தமிழறியாத் தமிழனிங்கு நீங்க வேண்டும்!
            தமிழ்ப்புலவர் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
      தமிழ்நாடு உலகப்புகழ் கொள்ள வேண்டும்!
            தமிழ்ப்பகைவர் இல்லாமற் போக வேண்டும்!
      தமிழ்மொழியும் தில்லிமொழி ஆக வேண்டும்!
            தமிழ்க்கலைஙர கனவுநனவாக வேண்டும்!” (1)
      “அப்பாவித் தமிழர்கள் மடிகின் றார்கள்!
            அதைக்கேட்கத் தமிழகத்தில் நாதி இல்லை!
      ஒப்பாரி இங்கேயும் கேட்கு தையோ?
            ஒண்டமிழர் வாழ்ந்தவிதம் என்னா யிற்று?
      இப்பாரை ஆள்வதற்கே கலைஞர் வந்தார்!
            இன்றமிழர் துயர்துடைக்க எழுந்து நிற்பார்!
      தப்பாமல் தில்லியிடம் குரல் எழுப்பித்
            தக்கபடி செய்வதுதான் கடமை யாகும்!”30 (2)
       தமிழ்வழிக் கல்வி கொணர, தமிழ் தழைத்தோங்கி வளரத் தமிழ்ப் பொங்கல் நாளில் உறுதி எடுக்க வேண்டும் என்று இதழாசிரியர் பின்வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
       தமிழ்மூலக் கல்விதனைக் கொணர வேண்டும்!
            தன்மான இனமாக வாழ வேண்டும்!
      ‘தமிழ்தானேஎனச்சொல்வார் ஒழிய வேண்டும்!
            தமிழுக்குப் பகைவரெவர் காண வேண்டும்!
      தமிழ்வாழ்வே தம்வாழ்வாய்க் கருத வேண்டும்!
            தக்கபடி தொண்டுசெய முனைய வேண்டும்!
      தமிழ்ஓங்க வழிவகைகள் செய்ய வெண்டும்!
            தமிழ்ப்பொங்கல் நாளுறுதி எடுக்க வேண்டும்!”43
புதுக்கவிதைவிளக்கம்
       மரபு இல்லாமைதான் புதுக் கவிதைக்கான இலக்கணம் ஆகிறதுபுதுக் கவிதை வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய் அமைந்த்துசீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடைத்த்து புதுக்கவிதை. எளிய சொற்கள், எளிய நடை, எளிதில் பொது மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய சந்தம் இவற்றைக் குறிக்கோளாக்க் கொண்டதே புதுக் கவிதை.
       புதுக்கவிதை
      என்பது
      சொற்கள்
      கொண்டாடும்
      சுதந்திர தின விழா
எனவும்,
       புதுக்கவிதை எனும் போர்வாள்
      இலக்கண உறையிலிருந்து
      கவனமாகவே
      கழற்றப்பட்டிருக்கிறது46
எனவும் குறிப்பிடுவார் கவிஞர் வைரமுத்துஆங்கிலத்தில்Modern Poetryஎனப்படும் புதுக் கவிதையை யாப்பற்ற கவிதை, உரைநடைக் கவிதை, உரைப்பா என்றும் கூறுவர்யாப்பு, எதுகை, மோனை, தனிமொழி என எந்த இலக்கணமும் இல்லாத்தே புதுக் கவிதை என்கிறார் கவிஞர் மு.மேத்தாஅவர்,
       இலக்கணச் செங்கோல்
      யாப்பு சிம்மாசனம்
      எதுகைப் பல்லக்கு
      மோனைத் தேர்கள்
      தனிமொழிச் சேனை
      பண்டித பவனி
      இவை எதுவுமில்லாத
      கருத்துக்கள் தம்மைத் தாமே
      ஆளக் கற்றுக் கொண்ட
      புதிய மக்களாட்சி முறையே
      புதுக்கவிதை47
என்று புதுக்கவிதைக்குப் புத்திலக்கணம் வகுக்கிறார்.
       தமிழ்நாட்டில் தடி எடுத்தவர்கள் எல்லாரும் தண்டல் காரர்கள்! தான் என்று நகைச்சுவை த்தும்ப உரைக்கிறார் சா.சி. மணி.
       தமிழ் மொழிக்கெனத் தலைவன் இல்லாநாடு;
                தமிழ் நாட்டுக்கெனத் தலைவன் இல்லாநாடு;
                தமிழ் இனத்துக்கென தலைவன் இல்லாநாடு;
      இங்கேதமிஎடுத்தவர்கள் எல்லாருமே
      ‘தண்டல்கார்ர்கள்!”53
       வேற்று மொழிகளுக்கள் எதிர்ப்பு வந்தால் நூற்றுக் கணக்கானோர் உயிரை விடுவர்ஆனால், தமிழன் தன்னுயிரை மட்டும் மாய்த்துக் கொண்டு பிறர் வாழட்டும் என்று நினைப்பான இது தமிழனின் உயரிய பண்பு என்று சிவனார் கூறகிறார்.
       இந்தி எதிர்ப்பின்  போது நூற்றுக்கணக்கானோர் மாண்டனர் என்பது தமிழக வரலாறுஅப்போதுங்கூடத் தம்க்கு எதிரியானவர்கட்கு எவ்வித்த் துன்பமும் தாராமல், ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என்று சொல்லிக் கொண்டே, மண்ணெண்ணெய் ஊற்றித் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டனர்! தமிழனின் பண்பு இது!60
       நாமெல்லாம் இந்திர்களாக இருந்தும் அப்பாவித் தமிழன் சாகும் போது வாய்மூடிக் கொண்டிருக்கிறோம் என்று சா.சி. மணி பின்வருமாறு உள்ளம் குமுறுகிறார்.
       அப்பாவித் தமிழர்கள்
      நாள்தோறும்
      செத்துக் கொண்டிருக்கிறார்கள்!
      கேட்க
      நாதியில்லை!
      ஆம்!
      நாமெல்லாம்
      இந்தியர்கள்!”63
       பிற நாட்டினரும் மதிக்கத்தக்க வகையில் தாய்மொழியில் கவிதை எழுதப்பட வேண்டும்; உலத்திலேயே தலைசிறந்த நாடகத் தமிழ்நாடு திகழ்வதற்கான வகை செய்ய வேண்டும் என்று சாம்பசிவனார் வழைகின்றார்.
       யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதைமரபுக் கவிதைஆயிற்றுசீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடையது மரபுக் கவிதை, பாக்களையடுத்துப் பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றினஇவ்வாறுதான் பாடப்பட வேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத வடிவமாகப் பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
       சாம்பசிவனார் எழுதிய கவிதைகள் தமிழ், தமிட்நாடு, தமிழ் இனம் எனத் தம்ழ்மொழப் பற்று மிக்க கவிதைகள், வாழத்துப் பாக்கள் பெரும்பாலும் வெண்பா இலக்கணத்தில் இடம் பெறுகின்றன.





இல்லினாய்சில் உள்ளஉலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநர், ‘தமிழ் மாருதத்தின் வாழ்நாள் உறுப்பினர் அழ. இராம்மோகன் அவர்தம் துணைவபியர் (திருமதி) மீனாட்சி இராம்மோகன் ஆகியோரின்மணிவிழாவாழ்த்துப்பா இதழில் வெளிவந்துள்ளது.
ஆசிரிய விருத்தம்
தமிழனுக்குச் சூடில்லை சொரணை யில்லை!
தமிழன்தான் என்றதொரு நினைவும் இல்லை!
தமிழனுக்குத் தன்மான உணர்வும் இல்லை!
தக்கபடி செய்வதற்குத் துணிவும் இல்லை!
தமிழனிவன் தன் நாட்டில் வாழ்வதற்குத்
தன்னினமே வகையேதும் செய்ய வில்லை!
தமிழன்தன் சாண்வயிறு கழுவு தற்குத்
தன்நாடு விட்டேகிச் சென்றா னன்றோ! (1)”
என்று தாய்நாட்டை விட்டு வெளிநாடு சென்ற தமிழனைச் சாடுகிறார் ஆசிரியர்.
பல்வேறு நாடுகளில் வாழ்வார் பலரே!
பாரெங்கும் இன்சுவடு காண்டல் கூடும்!
பல்வேறு மொழிபேசும் மக்க ளாகப்
பண்பினையும் மறந்திட்ட நிலையும் உண்டு!
பல்வேறு நிலைகளிலும் இருந்திட்டாலும்
பார்புகழ வாழ்வோரும் சிலபேர் உண்டு!
பல்வேறு வழியெல்லாம் தமிழைப் போற்றும்
பண்பான அழகப்பர் ஒருவர் உண்டு!” (2)
சிதறுண்ட தமிழர்களைச் சேர்க்க வேண்டும்!
சிந்தைமிகு இனமாகத் திகழ வேண்டும்!
பதர்போன்ற வாழ்க்கைதனை விட்டொழித்துப்
பாருக்கு வழிகாட்ட முனைய வேண்டும்!
கதம்காத்துக் கற்றடங்க வேண்டும் என்ற
கவின்மிக்க குறள்வழியே நிற்க வேண்டும்!
சதம்பலவும் கடந்தாலும் இந்த எண்ணம்
சான்றோராம் அழகப்பர் ஆழ்ந்து சொன்னார்!” (3)
            பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர் பலராவர்அவர்கள் தமிழ்ப் பண்பினை மறந்திட்ட நிலை உண்டுஆனால் வெளிநாட்டிற்குச் சென்ற பின்னும் தன் நிலையிலிருந்து மாறாது, சிதறுண்ட தமிழர்களைச் சேர்க்க வேண்டும் என்ற அரும்பாடுபடுபவர் அழ. இராம்மோகன் ஆவார்.
மீனாட்சி மணமுடித்த சிறப்பி னாலே
மேலான பணிகள்பல செய்கின் றாரே!
தானாட்சி மேற்கொள்ளத் தடைக ளின்றித்
தக்கதிருக் குறள்நூலை அளித்திட்டாரே!
கோனாட்சிக் காலத்தில் எவரும் எண்ணார்
குவலயமே போற்றுதிரு நூல்தந் தாரே!
மீனாட்சி பேர்ருளால் பல்லாண் டுகள்தாம்
மேன்மைகள் பலவுமெய்தி விளங்கு வாரே!” (4)
வெண்பா
மீனாட்சி நற்றுணைவர் மேன்மை அழகப்பர்
காணும் மணிவிழா! கன்னித் தமிழ்விழா!
நற்றமிழ் ஓங்கிடவே நாளும்யாம் ஏத்திடுவோம்!
கற்கண்டாய் வாழ்க கனிந்து!” (24)
            அழ. இராம்மோகன் தன் துணைவியார் மீனாட்சியுடன் நீடித்து வாழுமாறு மணிவிழா வாழ்த்துப் பாடுகிறார் ஆசிரியர்.
              ‘குறள்பீட விருதுபெற்ற அ.. ஞானசம்பந்தனை வாழ்த்திப் பாடப்பெற்ற வெண்பா :
வள்ளுவர் காட்டும் வழியிலே வாழ்கின்ற
தெள்ளுதமிழ்ப் பேரரறிஞர் தேர்ந்த கலைஞராம்
ஞாலம் சிறக்கவே ஞானசம் பந்தனார்
காலமெலாம் வாழ்க கனிந்து” (26)
வள்ளுவர் வழிநின்று வாழ்வு நடத்தும் தமிழ்ப்
பேரரறிஞர் ஞானசம்பந்தனார் இவ்வுலகில் நீடு வாழ வே
      இத்தகு சிறப்புக்கு உரிமையுடையோர்மூதறிஞர்’, ‘முத்தமிழ்க் காவலர்கி..பெ. விசுவநாதம் ஒருவரேதம் 96ஆம் வயதில் உயிர் நீத்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் சிவனார் பாடிய இரங்கற்பா:
முத்தமிழின் காவலரே! முத்தமிழ்ச் செல்வரே! நீர்
இத்தரைவிட் டேகினீர் என்றிட்டார்! – அத்தாவே!
விண்ணொடும் தீந்தமிழை வேதம்போல் பாடிடவே
நண்ணினீர் என்றிடுவேன் நன்று!”
      தமிழ்வழிக் கல்வியைக் கொணரக் கவிதை மூலம் தமிழக முதல்வர் கலைஞருக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறார் சிவனார்.
தமிழ்வழியே கல்விதனைக் கொணர வேண்டும்!
தமிழர்களே விழிப்புணர்வு கொள்ள வேண்டும்!
தமிழறியாத் தமிழனிங்க நீங்க வேண்டும்!
தமிழ்ப்புலவர் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்!
தமிழ்நாடு உலகப்புகழ் கொள்ள வேண்டும்!
தமிழ்ப்பகைவர் இல்லாமற் போக வேண்டும்!
தமிழ்மொழியும் தில்லிமொழி ஆக வேண்டும்!
தமிழ் கலைஞர் கனவுநனவாக வேண்டும்!” (1)
அப்பாவித் தமிழர்கள் மடிகின் றார்கள்!
அதைக்கேட்கத் தமிழகத்தில் நாதி இல்லை!
ஒப்பாரி இங்கேயும் கேட்கு தையோ?
ஒண்டமிழர் வாழ்ந்தவிதம் என்னா யிற்று?
இப்பாரை ஆள்வதற்கே கலைஞர் வந்தார்!
இன்றமிழர் துயர்துடைக்க எழுந்து நிற்பார்!
தப்பாமல் தில்லியிடம் குரல் எழுப்பித்
தக்கபடி செய்வதுதான் கடமை யாகும்!”
      தமிழ்வழிக் கல்வி கொணர, தமிழ் தழைத்தோங்கி வளரத் தமிழ்ப் பொங்கல் நாளில் உறுதி எடுக்கவேண்டும் என்று இதழாசிரியர் பின்வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
தமிழ்மூலக் கல்விதனைக் கொணர வேண்டும்!
தன்மான இனமாக வாழ வேண்டும்!
தமிழ்தானேஎனச்சொல்வார் ஒழிய வேண்டும்!
தமிழுக்குப் பகைவரெவர் காண வேண்டும்!
தமிழ்வாழ்வே தம்வாழ்வாய்க் கருத வேண்டும்!
தக்கபடி தொண்டுசெய முனைய வேண்டும்!
தமிழ்ஓங்க வழிவகைகள் செய்ய வேண்டும்!
தமிழ்ப்பொங்கல் நாளுறுதி எடுக்க வேண்டும்!”
      ‘யாதம் ஊரே! யாவரும் கேளிர்என்பது கணியன் பூங்குன்றனாரின் அடிஆனால் இன்றைய தமிழன் பக்கத்து மாநிலத்தில்கூட நிம்மதியான வாழ்வு பெற முடியாத அவலநிலை இருந்துவருகிறதே என்று வருந்துகிறார் சா.சி.மணி.
யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!
என்று சொன்னான் தமிழன்!
மற்றவர்கள்
இதை ஏற்கிறார்களா?
அண்டை மாநிலத்திலும்
நிம்மதியாக வாழ முடியாமல்
தவிக்கிறானே தமிழன்?”
தமிழ்நாட்டில் தடி எடுத்தவர்கள் எல்லாரும் தண்டல்கார்ர்கள்! தான் என்று நகைச்சுவை த்தும்ப உரைக்கிறார் சா.சி.மணி.
தமிழ் மொழிக்கெனத் தலைவன் இல்லாநாடு;
தமிழ் நாட்டுக்கெனத் தலைவன் இல்லாநாடு;
தமிழ் இனத்துக்கென தலைவன் இல்லாநாடு;
இங்கேதடிஎடுத்தவர்கள் எல்லாருமே
தண்டல்கார்ர்கள்!” (53)
நாமெல்லாம் இந்தியர்களாக இருந்தும் அப்பாவித் தமிழன் சாகும்போது வாய்மூடிக் கொண்டிருக்கிறோம் என்று சா.சி.மணி பின்வருமாறு உள்ளம் குமுறுகிறார்.
அப்பாவித் தமிழர்கள்
நாள்தோறும்
செத்துக் கொண்டிருக்கிறார்கள்!
கேட்க
நாதியில்லை!
ஆம்!
நாமெல்லாம்
இந்தியர்கள்!” (63)
மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைகூ கவிதை என்னும் முத்திறக் கவிதைகளையும்தமிழ் மாருதம்தாங்கி வருகிறதுமரபுக்கவிதைகளே மிகுதியாக உள்ளனகவிஞர்கள் வண்ணை மூர்த்தி, பெரி. நீல. பழநிவேலன், கூடற்கூத்தன், பூவேந்தன், கவிலவாணன் ஆகியோரின் கவிதைகள் இவ்விதழுக்கு அணிசேர்க்கின்றன ; தண்தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இக்கவிதைகள் அமைகின்றனகவிதைகள் அனைத்தும் தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்துவருகின்றனபிற நாட்டினரும் மதிக்கத்தக்க வகையில் தாய்மொழியில் கவிதை எழுதப்பட வேண்டும்; உலகத்திலேயெ தலைசிறந்த நாடாகத்தமிழ்நாடு திகழ்வதற்கான வகை செய்ய வேண்டும் என்று சாம்பசிவனார் விழைகின்றார்யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதைமரபுக் கவிதைஆயிற்றுசீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடையது மரபுக் கவிதைபாக்களையடுத்துப் பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றினஇவ்வாறுதான் பாடப்பட வேண்டும்  என்னும் வரையறை இருப்பதால் சிதறாத வடிவமாகப் பாதுகாக்கப்பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
       புதுக்கவிதை வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய் அமைந்த்துசீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடைத்தது புதுக்கவிதைஎளிய சொற்கள், எளியநடை, எளிதில் பொது மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய சந்தம் ஆகிய இவற்றைக் குறிக்கோளாக்க் கொண்டதே புதுக்கவிதைஆங்கிலத்தில்  ‘Modern Poetry’ என்று அழைக்கப்படும் புதுக்கவிதையைத் தமிழில் யாப்பற்ற கவிதை, உரைநடைக் கவிதை, உரைப்பா என்றவாறு விளக்கம்தரப்பட்ட வருகிறது.

சிவனாரின் சைவத் தொண்டில் குறிப்பிடத்தக்கவை
1.    சைவ சமயக் குடும்பம்ஒன்பதாம் வயதில்சமய தீட்சைபெற்றவர்.
2.   தந்தைவழி, தேவாரம், திருவாசகம், திருமுருகாற்றுப் படை, திருப்புகழ் முதலானவற்றைச் சிறு பருவ முதலே கேட்டு, அவற்றில் மனப்பாடம் செய்தவர்.
3.   மதுரையில் பள்ளியில் பயிலும்போதே, ஆடி வீதியில் நிகழும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவைத் தவறாமல் கேட்டு, அத்தகைய பக்தி நூல்களின் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்என்னைப் பற்றி வாரியார், தம் கைப்பட எழுதிய வெண்பாவை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளார்.
4.   மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் செயலராகப் பல்லாண்டு பணி புரிந்தமையால், இலக்கியத் தொடர் சொற்பொழிவன்றிச் சமயம் தொடர்பான சொற் பொழிவுக்கும் ஏற்பாடு செய்தேன்.  ‘உரைவேந்தர்ஔவை சு. துரைசாமி பிள்ளையைக் கொண்டு, ஞாயிறுதோறும் காலை, ‘சிவஞான போத வகுப்பு; அவ்வாறே, ஞாயிறு தோறும் பேராசிரியர் சுப. அண்ணாமலை வழியாகத் திருவருட்பா தொடர் சொற்பொழிவுமற்றும், திருமுறைச் சொற்பொழிவு போன்றவை!
5.   மதுரைப் பல்கலைக்கழகம் நடத்தியசிவஞான பாடியம் வேனில் வகுப்பில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றவன்.
6.   தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் சமயச் சொற்பொழிவு!
7.   அவ்வாறே மதுரை வானொலி நிலையத்தில் திருவெம்பாவை – 30 நாள் பேச்சு;   கோவை வானொலி நிலையத்தில் பழனி பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்தொடர் சொற்பொழிவுகாலை நிகழ்ச்சியிலும் சான்றோர் சிந்தனை!
8.   மதுரையில் உள்ள பன்னிரு திருமுறை மன்றம், சைவ சித்தாந்த சபைகளில் சமயச் சொற்பொழிவு.
9.   சமயத் திங்கள் இதழ்களானமெய்கண்டார்’, ‘உழவாரம்’, ‘ஞான சம்பந்தம்’, ‘திருக்கோயில்’, ‘ஸப்தகிரிமுதலான திங்கள் ஏடுகளில் சமய ஆய்வுக் கட்டுரைகள்!
10.  கோலாலம்பூரில் நடந்த இரண்டாவது உலக சைவ சித்தாந்த மாநாட்டில், பல்கலைக்கழகச் சார்பாளராகச் சென்று, ‘சங்க இலக்கியத்தில் சைவ சித்தாந்தம்என்ற பொருள் குறித்து ஆய்வுக் கட்டுரை.
11.   அவ்வாறே ஆங்கு நடந்த உலகத் தமிழ் மாநாட்டிலும், அவர்களது சிறப்பு அழைப்பின் பேரில் சென்று, ‘காப்பியர் வழியில் சேக்கிழார்என்ற பொருள் குறித்து ஆய்வுக் கட்டுரை படித்தேன்பின்பு, அவர்களது ஏற்பாட்டில், 7 தலைநகரச் சொற்பொழிவு.
12.  மலேசியாவில் ஆறு. நாகப்பன் நடத்திவரும், சைவ சிநத்தாந்த வகுப்பில், தொடர்ந்து ஒரு வாரம் சித்தாந்தப் பாடம்.
13.  கொழும்பு சென்ற போது, ஆங்குள்ள பம்பலப்பட்டி திருக்கோயிலில், அரசு ஏற்பாட்டின்படி, ‘மனம் நின்று உருக்கும் மதுர வாசகம்என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவுஅப்போது ஆங்கு வபந்திருந்த முதியவர் ஒருவர், ‘நீங்கள் கிருபானந்த வாரியார் மாதிரிப் பேசுகிறீர்கள்!’ என்று கூட்டத்தில் பாராட்டினார்.
14.  சிங்கப்பூரில் பத்தாவது திருமுறை மாநாட்டிற்கு, அவர்களது அழைப்பின் பேரில் சென்று, திருமூலர் திருமந்திரம் பற்றி உரையாற்றினேன்மற்றும் மன்பே ஏற்பாடு செய்திருந்தபடி 7 திருக்கோயில்களில் சமய விரிவுரையாற்றினேன்.
15.  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கலையன்னை நிறுவியதியாகராசச் செட்டியார் அறக்கட்டளைச்சொற்பொழிவு 2 நாள், திருமுறை பற்றி உரையாற்றி அம்மையாரின் பாராட்டுப் பெற்றேன்!
சைவத்திற்கும் சைவ சித்தாந்தத்துறைக்கும் ஆற்றிய பணிகள்
       மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வித்துறை, தமிழ் இணைப்பேராசிரியர் பணியினின்றும் 1988 மேத்திங்களில் ஓய்வு பெற்றதுமே, முனைவர் தமிழண்ணல் உதவியால் தமிழ்த்துறையில்சிறப்புநிலைப் பேராசிரியர்’  (Research Fellow) பணியிலிருந்தேன்!
                அப்போது யான் ஆற்றிய பணிகள் பலவாகும்! குறைந்த ஊதியமே, அஃதாவது இரண்டாயிர ரூபாய்ஊதியத்தை நோக்காது, ‘சைவத்துக்குத் தொண்டு செய்வதே என் கடன்எனும் கொள்கை! யான இங்குப் பணியாற்றிய காலம் : 1990 சூலை முதல் 2007 வரை.  17 ஆண்டுகள்குறைந்த ஊதியத்தில் அப்போது நிறைவேற்றிய ஆய்வுகள் :
1.    சிவஞான முனிவரின் சித்தியார் உரைசொற்பொருள் அடைவு.
2.   சிவஞான முனிவர் சித்தியார் உரையிற் காணும் இலக்கணக் குறிப்புக்களும் விளக்கங்களும்.
3.   சிற்றிலக்கியங்களில் சைவ சித்தாந்தக் குறிப்புக்கள்
4.   சுந்தரர் தேவாரத்தில் சைவ சித்தாந்தம்
5.   திருவாசகத்தில் சைவ சித்தாந்தம்
6.   திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சிந்தாந்தம்
7.   சிவஞானபோதச் செம்பொருள்
8.   தாயுமானவர் பாடல்களில் சமய நல்லிணக்கச் சிந்தனைகள்
9.   இராமலிங்கர் பாடல்களில் சமய நல்லிணக்கச் சிந்தனைகள்
10.  சைவ சிந்தாந்தக் கலைச்சொல் அகராதி
11.   சைவ சமய இலக்கிய அகராதி 1
12.  சைவ சமய இலக்கிய அகராதி 2
தொல்காப்பியம்எழுத்து : சொற்பொருளடைவு; தொல்காப்பியம்செல்சொற்பொருளடைவு எனும் இர ஆய்வுகள் செய்து முடித்தேன்இங்குப் பணி நீட்டிப்புக் கிட்டவில்லை! எனினும் என்பால் பெருமதிப்புக் கொண்ட துணைவேந்தர் பெருமைமிகு எம். இலட்சுமணன், பதிவாளர் பெருமைமிகு சிவசங்கரன் ஆகிய இருவரும், சைவ சித்தாந்த்த் துறையில் ஆய்வுப்பணி மேற்கொள்ள ஆணை பிறப்பித்தனர்! அப்போது துறைத் தலைவர் டி.பி. சித்தலிங்கையா!
துறையில் டி.பி. சித்தலிங்கையா தலைமையில் நால்வர் பணிபுரிந்தனர்முறையாக எம்.ஃபில். வகுப்பும், முனைவர் பட்ட ஆய்வும் நடந்தனஒவ்வொருவராக ஓய்வு பெற்றனர்; முனைவர் ச. கங்காதரன் மட்டுமே துறைத்தலைவராக இருந்தார்.
எனது பெருமுயற்சியாலும் துறைத்தலைவரின் ஆதரவாலும், சைவ சித்தாந்த்த்தில்முதுகலைதொடங்கப்பட்டதுதொடக்கத்திலேயே ஆறுபேர் சேர்ந்து படித்தனர்; யானும் வகுப்புகள் நடத்தினேன்!
ஈராண்டு முடிந்தது; மீண்டும் மாணவர் சேர்க்கைக்குப் பல்கலைக்கழகம் இசைவளிக்கவில்லை! எனவே எம்.ஃபில். வகுப்பு மட்டும் துறைத்தலைவர் நடத்தி வந்தார்; ஆய்வு மாணவர்க்கு வழிகாட்டுநராகவும் இருந்தார்!
இதற்கிடையில் துறையை மூடிவிடும் நிலை வந்தது! இப்படி ஒரு துறை உண்டு என்பதுகூட, மதுரையில் உள்ள சைவர்களுக்கே தெரியாது! என் செய்வதெனச் சிந்தித்தேன்.
தெ.பொ.மீ. முயற்சியால் மலேசியாவில், இத்துறைக் கென மூன்று இலட்ச ரூபாய் சேர்க்க முடிவாயிற்று.
மு. வரதராசனார் துணைவேந்தராயிருக்கும் போது மலேசியா சென்றவர், அத்தொகையைப் பெற்றுக் கொண்டு துறையைத் தொடங்கினார்; முதன்முதல் சைவ சித்தாந்த முதியவர் க. வச்சிரவேல் முதலியாரை வரவழைத்துப் பணியில் அமர்த்தினார்! பல்கலைக்கழக அஞ்சல்வலிக் கல்வி முதுகலை மாணவர்க்குரிய விருப்ப்ப் பாடங்களாகச் சைவ சித்தாந்தமும், ஒப்பியல் இலக்கியமும் இருந்தனநூற்றுக்கணக்கானோர், சைவ சித்தாந்தப் பாடம் எடுத்து வெற்றி பெற்றனர். வச்சிரவேறு முதலியாரும், முனைவர் ச. கங்காதரனும் வகுப்புகள் நடத்தினர்.
இத்தகைய பயனுள்ள துறையை மூடிவிட்டால் என் செய்வது?’ என்று வருந்தினேன்; மலேசியா அருள்நெறிக் கூட்டத்திற்குத் தனிப்பட்ட முறையில் நிலைமை குறித்து எழுதினேன்.  அவர்களும் காலங்கடத்தாமல் செயற்குழுவைக் கூட்டி, ‘மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த்த்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றித் துணைவேந்தருக்குப் பதிவஞ்சலில் அனுப்பி எனக்கும் அதனைத் தெரிவித்தனர்!
எனது பெருமுயற்சியாலும் இறைவன் திருவருளாலும் சைவ சித்தாந்த்த்துறை செயல்பட்டு வருகின்றதுதுணைவேந்தர் பெருமைமிகு கற்பக குமாரவேல், துறைக்கென மூன்று இணைப்பேராசிரியர்களை நியமித்தள்ளார் என்பது வரவேற்கத்தக்கதொன்றாகும்.
…… நூல்கள் எழுதியபின், பதிவாளர் பண்பாளர்முனைவர் வெ. அழகப்பன், என்பால் கொண்ட அன்பினால், மீண்டும் தமிழ்த்துறையில் 24.10.2005 முதல் பணிபுதிய ஆவன செய்தார்முன்னைவர் இரா. மோகன் ஆட்சிக்குழு உறுப்பினர்; நண்பர் முனைவர் மு. மணிவேல் துறைத்தலைவர்எனவே மகிழ்வுடன் பொறுப்பை ஏற்றேன்; இவர்கள் விருப்பப்படி தமிழ் முதுகலை மாணவர்க்குத் தொல்காப்பியப் பாடம் நடத்தினேன்மதிப்புக்குரிய முனைவர் மருதமுத்து துணைவேந்தராக இருந்த போது, இவ்விரு நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்க, அத்துணை ஆண்டாக இரண்டாயிரம் மட்டுமே ஊதியம் பெற்றுவந்த எனக்கு, ஐயாயிரமாக உயர்த்திக் கொடுத்தார்.
தமிழ்த்துறைக்கு வந்த பிறகும் சைவ இலக்கியங்களில் தமிழர் பண்பாடு தொகுதி 1, 2 மற்றும் தொல்காப்பியம் பொருளதிகாரம் அனைத்திற்கும் சொற்பொருள் அடைவு தயாரித்தேன்!
எனக்குக் கொடுக்கப்பட்ட தமிழ்ப் பணியைச் செம்மையாய் நிறைவேற்றியுள்ளேன் என்ற மனமகிழ்வு! எனினும் போதிய உடல்நலமில்லாமையால், பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்!
என் துணைவி மனோன்மணி, 1986ஆம் ஆண்டு (26-07-1986) மாரடைப்பால் இயற்கை எய்தினள்! அதனாலேயே யான் மிகமிக்க் குறைந்த ஊதியத்தில் பணிபுதிய நேர்ந்த்துஎனினும் என் கடமையை முழுமையாகச் செய்து பலரது பாராட்டும் பெற்றேன் என்ற மன அமைதி எனக்கு உண்டு!
இவைதவிர, என் சொந்தச் செலவில், சமய நூல்கள் சிலவும் எழுதியுள்ளேன்யாவரும் படித்துப் பயன்பெறும் வகையில் இலவச வெளியீடுகளும் வெளியிட்டுள்ளேன் (காண்க: நூற்பட்டியல்).
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலே, காலை நீராடிய பின், வழிபாடு செய்வது வழக்கம்.
மதுரை மீனாட்சி திருக்கோயிலினுள், யான் பல்லாண்டுகள் தொண்டு செய்தமதுரைத் திருவள்ளுவர் கழகம்அமைந்திருப்பதால், இயல்பாகவேஇறைவன் எண்ணம்வந்துவிடும்.
இந்த்த் திருமுறைகள்தாம் இன்றும் எனக்குப் பேருதவியாககுறிப்பாகச் சொல்வதனால்யாருமில்லாமல் தனித்திருக்கும் எனக்கு உற்றுழி உதவி வருவன எனில் மிகையில்லை!
இத்தகு காரணங்களால்தான், மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சைவ சித்தாந்த்த்துறையில் மிக்க ஈடுபாட்டுடன், ஓய்வு பெற்ற பின்னரும் பலகாலம் பணிபுதிய முடிந்த்து!
1978ஆம் ஆண்டில், நெல்லையில், அஞ்சல்வழிக் கல்வியில் தமிழ் முதுகலை பயிலும் மாணவர்க்குத்தொல்காப்பியம் செய்யுளியல்பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே மாணவர் ஒருவர், உடனே பாடியளித்த நேரிசை வெண்பா:
யாப்பின் இலக்கணமே யாவர்க்கும் நன்றாகச்
சேர்ப்பிக்கும் சாம்ப சிவனார்க்குமூப்பு
மிகவுடைய யாமே மிகவணங்கி நிற்போம்
தகவுடனே என்றுமெமைத் தாங்கு!”
-    செல்லை மாணாக்கர் சார்பில் க.. இராமசுவாமி (சேரன்மாதேவி)
(இவர், வங்கி ஒன்றில் பணிபுரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!)
28. வானொலிப் பொழிவுகள் :
23.12.1965 முதல் : திருச்சிராப்பள்ளி, சென்னை, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி, திருவனந்தபுரம், கோயம்புத்தூர் முதலாயின.
மதுரை வானொலி : மார்கழி மாதம் முழுவதும் திருவெம்பாவை விளக்கம் (2 ஆண்டுகள்)
கோவை வானொலி : பழநி முருகன் பிள்ளைத்தமிழ், திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் விரிவுரைகள்.
திருச்சி வானொலி : பேரா. . வெள்ளைவாரணனாருடன் நாவலர் பாரதியார் பற்றிய பேட்டி.
மதுரை வானொலி : பெரும்புலவர் ச. தண்டபாணி தேசிகருடன் பேட்டி – 7 மணி நேரம். (ஈயக்குநர் திரு. விசய திருவேங்கடம் ஏற்பாடு! இன்றும் பாதுகாப்பாக உள்ளது!)
சென்னைத் தொலைக்காட்சி : 3 முறை (டாக்டர் ல்லிதா காமேசுவரனுடன் நாவலர் பாரதியார் குறித்துப் பேட்டி!)
கோலாலம்பூர், சிங்கப்பூர், கொழும்பு : வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் சொற்பொழிவுகள்!
29. சொற்பொழிவு :
1950 முதல் பல்வேறு ஊர்களில் – (பெங்களுர் உட்பட)
30. பட்டிமன்றம் :
முதன் முதல் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் யான் செயலராயிருக்கும் போது அறிஞர்களின் பட்டிமன்றம்தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் பட்டிமன்ற நடுவராகபேச்சாளராக! (தமிழ் மாருதம் இதழில் விரிவாக உள்ளது!)
32. யான், அக்காலத்தில், ‘மதுரைச் சிவம்என்ற புனைபெயரில் பல்வேறு
இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
நினைவிலிருந்து சில இதழ்கள் :
தமிழர் நாடு, தமிழ் நாடு, நவ இந்தியா, வீரகேசரி (கொழும்பு), செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, குறள் மலர், மதுரை மலர், திங்கள், நித்திலக் குவியல், தமிழன் குரல் (அட்டைப் படத்துடன்), தமிழ் நேசன் (சிங்கப்பூர்), குறிஞ்சி, தமிழ்த் தென்றல், தினமணி, தினமலர், கலைக்கதில், தினத்தந்தி, திருக்கயிலை, இந்திய முரசு, தமிழக அரசு, சப்தகிரி (திருப்பதி), திருக்கோயில், சத்தியவர்த்தமானி, சைவ உலகு (இலண்டன்), சைவ நீதி (கனடா), உழவாரம்.
32. திரு. ஐராவதம் மகாதேவன் ஆசிரியராயிருந்த போதுதினமணியில்நூல் மதிப்புரை’ – ஏறத்தாழ 40 நூல்கட்கு மேல் எழுதியுள்ளேன்!
33. மதுரைக் காமராசர் பல்கலைக்கழக ஆய்வு ஆசிரியர் மன்றம் :
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற விழைவோர்க்கென, மதுரையில், ‘ஆய்வு ஆசிரியர் மன்றம்ஒன்றை உருவாக்கினேன்பேரா. முத்து சண்முகனார்தலைவர்தமிழ்க்குடிமகனார் உள்ளிட்டோர் பொறுப்பினர்யானும் பேரா. சீனி. சௌமிய நாராயணனும் செயல்கள்திங்கள்தோறும் கூட்டம்; ஆய்வாளர், ஆய்வுக் கட்டுரை படிப்பார்வேண்டிய திருத்தங்கள் கூறப்படும்தமிழக அரசுச் செய்தித்துறை அலுவலராக இருந்த திரு. ஜெயச்சந்திரன் மாற்றலாகிப் போனது வரை அந்தக் கட்டிடத்தில் நடந்த்து!
34. தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட களஞ்சியம், சாகித்திய அகாதமி வெளியிட்ட புதிய அகராதிஇவற்றிற்கு அவர்கள் அளித்த தலைப்பில் செய்திகள் அளித்துள்ளேன்!
              மரபிலக்கியங்களில் தேர்ந்த பயிற்சியும், ஆழமான புலமையும் கொண்ட ச. சாம்பசிவனார், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்கியவர்.

              முனைவர் ச. சாம்பசிவனார், ‘நிலவே நீ சாட்சிஎனும் சிறுகதைத் தொகுப்பை 1997ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்அறுபதுகளில் இக்கதைகள்தமிழ்நாடு’, ‘மதுரை மலர்’, ‘கொழும்ப வீரகேசரிமுதலிய இதழ்களில் வெளிவந்துள்ளன என்பது அவர் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து தெரிகிறது (நிலவே நீ சாட்சி, முன்னுரை).  பத்துச் சிறுகதைகளை மட்டுமே எழுதியிருப்பினும், . காம்பசிவனாரின் சிறுகதைத் திறன் அவருடைய தொகுப்பில் நன்கு வெளிப்பட்டுள்ளது. சாம்பசிவனாரின் எழுத்தாற்றலையும், சிறுகதை எழுதும் நுட்பத்தையும் விளக்குகிறது.