Friday, 29 July 2016

பெண் கவிஞர்கள் பார்வையில் பெண்கள்

பெண் கவிஞர்கள் பார்வையில் பெண்கள்
                உலக உயிர்களின் உன்னதப் படைப்பு பெண். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கிணங்க பெண் இன்றி ஓர் உயிரும் உலக இயக்கமுமே ;ல்லை எனலாம். அத்தகு பெருமைமிகு பெண் எல்லோராலும், காலந்தோறும் போற்றப்பட்டு வருகிறாள். பெண்மையைப் போற்றாத  சான்றோரும் ;ல்லை.
                ‘ஆணெனும் அரக்கனாக வாழ்வதிலும்
                பெண்ணெனும் தெய்வமாக வாழ்வதில்
எனக்கு விருப்பமுண்டு என்று திரு.வி.. நவசக்தி இதழில் கூறியது இங்கு நோக்கத்தக்கது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் பெண்களின் நிலைப்பாடுகளை இக்கால பெண் கவிஞர்கள் விளக்குவதையே இக்கட்டுரை ஆராய்கிறது.
                “குழந்தைப் பருவத்தில் தந்தை
                இளமைப் பருவத்தில் கணவன்
                முதுமைப் பருவத்தில் மைந்தன்
ஏன பெண்கள் அன்று முதல் இன்று வரை ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். கட்டுப்பாட்டிற்குள் பெண் இருப்பதனால் பெண்மை தாழ்ந்துவிடுமா என்ன?
                பெண் அறத்தினை ஆண் மக்கள் வீரந்தான்
                பேணுமாயிற் பிறிதொரு தாழ்வில்லை
என்று சாடுகிறார் மகாகவி. இதே போன்று திருமுருக கிருபானந்த வாரியர் தம்முடைய சொற்பொழிவில் கூறும்பொழுது, பெண்களை ஆண்கள் காவல் புரிவதால் பெண்மை தாழ்ந்தது அன்று. மென்மையை வன்மை காவல் புரியும் வன்மைக்கு மென்மை அடங்கும். ஆடவர் வன்மை உடையவர். பெண்கள் மென்மை உடையவர். அதனால் பெண்மையை ஆண்மை காவல் புரிகிறது. தங்கம் மென்மையானது;;  இரும்பு வன்மையானது;;;;;;  வன்மையான இரும்புப் பெட்டியில் மென்மையான தங்கத்தை வைத்துக் காப்பாற்றுவர். காவலில் இருக்கும் தங்கம் தாழ்மையானது என்று உலகம் கருதுவதில்லை என்று விளக்குகிறார்.
                இன்றைய காலச்சூழலில் பணிக்குச் செல்லும் பெண்கள், சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலானோர் தனித்துச் செயல்படுகின்றனர் என்பதுதான் உண்மை.
                ஆண்களை மட்டும் சுதந்திரப்படுத்தி அழகுபடுத்தி பார்க்கும் இச்சமுகம் பெண்களை அலங்காரப் பொருளாகப் பார்க்கிறது. இல்லக் கட்டு;ப்பாட்டிலிருந்து வெளியேறா சட்டங்களை வகுத்துக் கொள்கிறது. இதனை கவிஞர் திலகபாமா,
                                “சமுதாயச்
                                சட்டங்கள்
                                ஆண் சமூகத்தை
                                அலங்கரிக்கும்
                                அலங்காரச் சட்டங்கள்
                                பெண் சமூகத்திற்கோ
                                கட்டங்கள்
எனும் கவிதையில் தெளிவுபடுத்துகிறார். மேலும் முதிர்கன்னிகளின் நிலையோ வரதட்சணை எனும் விலங்கிடம் அகப்பட்டு தவிப்பதாக உள்ளது.
                                “ஊரெங்கும் நெருப்புக் கோழிகள்
                                மண்ணுள் புதைந்து புதைந்து
                                கழுத்து நீண்டு போகும்
                                நெருப்புக் கோழிகள்
                                நீண்டக் கழுத்தைக் காரணமாக்கி
                                நிழலுக்கும் சவரன்கள் கேட்கும்
                                அம்புகள்
                இவ்வாறு நிழலுக்கும் சவரன்கள் கேட்கும் ஆண் வர்க்கத்தினரைச் சாடுகிறார். வேலைக்குப் போகும் முதிர்கன்னிகளோ ஒண்ணாந்தேதி அமுதசுரபிகள் என வைரமுத்து மொழிவது இவண் நோக்கத்தகும். ஆக, ஆண்வர்க்கத்தினரைச் சார்ந்து வாழும் பெண்கள் இல்லிலும் சில கட்டுப்பாடுகளுக்கு அடங்கியே வாழ்கின்றனர்.
                ;க்காலக் கட்டத்தில் சமுதாய, சமய, பொருளாதார, அரசியல் சூழல்கள் பலவற்றால் பெண்களின் நிலை சிற்சில நிலைகளில் மேம்பட்டுக் காணப்படினும், மரபு ரீதியான கட்டமைப்புகளிலிருந்தும இன்னும் வெளிவரமுடியவில்லை என்பது தான் உண்மை. எந்தச் செயல் செய்தாலும் பெண்ணே பாதிக்கப்பட்டவளாகவும், குற்றவாளியாகவும் ஆகிறாள். இதனை கவிஞர் கனிமொழி,
                                “இன்று
                                நான் பெரிய பெண்
                                உரத்து சிரித்தல் கூடாது
                                விரித்த புகையிலை
                                அடக்கம் பொறுமை நாணம்
                                பெண்மையின் அணிகலன்
                                கதைத்தல் சிரித்தல்
                                பார்த்தல் நடத்தல்
                                உடுத்தல்
                                எல்லாம் இன்னபடி என்றெழுதி . . .
                                நான் கல்லாய்
                                பாறையாய்
                                பெண்ணாய் . . .”
என்று உணர்ச்சியற்ற ஜடப்பொருளாய், அஃறிணை பொருளாய் அடக்கப்படுவதை தம் கவிதையில் தெரிவிக்கிறார். மேலும்,
                                “கல்யாண நேரத்தில்
                                வீடு
                                வெள்ளையடிக்கப்பட்ட போது
                                விட்டத்தில் அவள்
                                சொருகி வைத்திருந்த கனவுகளுக்கும்
                                நிறம் மாற்றப்பட்டது
என்ற கவிதை மொழியில் திருமணத்திற்கு பின் அவளுடைய ஆசைகள், கனவுகள் எல்லாம் நொறுக்கப்படும் என்பதனைச் சுட்டுகிறார்.
                இன்று பெண்கள் திருமணச் சந்தையில் வியாபாரப் பொருளாய் வலம் வருகின்றனர். நாளுக்கு நாள் திருமணம் என்ற புனிதத் தன்மை மாறி வணிகநிலையாக வருகின்றது. இதனை கவிஞர் தீபா,
                                “பெண்களுக்குச்
                                சவரங்களை அடுக்காவிட்டால்
                                வறட்டிகளை
                                ஊடலில் அடுக்கும்
                                உலகம் . . .”
என்று திருமணம் எனும் வணிகச் சந்தையில் விலைபோகா பெண்கள் இறுதியில் மாய்க்கப்படுவதாக உருகுகிறார். வுரதட்சணை இல்லாவிடில் அவர்களை மாய்த்துவிடும் சமூகமாக ஆணாதிக்கச் சமூகம் விளங்குவதாக உள்ளது கவிஞர் தீபாவின் கவிதை முழக்கம். அவரே,
                                “ரோஜாக்களே!
                                இதழ்களைக் கொட்டி
                                தேய்ந்துப் போவதை விட
                                இதழ்களோடு காய்ந்து
                                போவது மேல் . . .”
என்றும் அதற்கு தீர்வு கூறுகிறார்.
                திரைத் துறையில் கால் பதித்த பெண் கவிஞரான தாமரை, மணவிழாவில் மணப் பெண்ணை பார்ப்பதைவிட கழுத்தில் சவரன்களை நோட்டமிடுவதுதான் இக்காலமாக உள்ளது என்பதனை,
                                “என் மணவிழாவில்
                                நான் தொலைந்து போனேன்
                                ஆனால் யாரும் என்னைத்
                                தேடவேயில்லை
என்று விளம்புகிறார்.
                பெண்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக தன்னை சமூகத்திற்கு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. திருமணமான பெண்களும் சமூகத்தில் பாதுகாப்பு கருதி சில சடங்குகளை அணிகலன் என்ற பெயரில் பூண வேண்டியுள்ளது. இக்கட்டுப்பாட்டை,
                                “நெரிசல் பயணங்களில்
                                உரசப்படாமல் இருக்க
                                சங்கிலி உள்போட்டும்
                                உச்சியில் பொட்டிட்டும்
                                குறைந்த பட்சம்
                                காலுக்கு மோதிரம் போட்டாவது
                                பிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது
                                சடங்குகளை
என்ற கவிதை வரிகளில் கோடிட்டுக் காட்டுகிறார் வெண்ணிலா.
                                “பெண்கள் ஈரப்பிசுபிசுப்போடும்
                                இரத்தப் பெருக்கோடும் உறங்க
                                வேண்டிய நிலை ஏற்படும் போது
                                தாங்க மடிதர வேண்டிய
                                தாயும்தொடாதே தள்ளி நில்
என்கிறாள். இந்த துன்பம் அஃறிணை உயிர்களுக்குக்கூடக் கிடையாது. பெண்ணின் நிலையை வெகுளியோடு வெளிப்படுத்துகிறார் . வெண்ணிலா.
                ஒரு குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு பெண்ணின் உணர்வுகளை, அவலங்களை கையாண்ட பெண்ணியக் கவிஞர் பத்மாவதி தாயுமானவர். அவர், கருவறை முதல் கல்லறை வரை பெண்கள் படும் இன்னல்தனை மிக நுட்பமாய் பதிவு செய்கிறார்.
                                “பிரசவத்தில் துணையிருக்கும்
                                தாதிப் பெண்ணையும்
                                சுடுகாட்டுப் பணியாளனையும்
                                சந்தித்தேன்
                                தாதிப் பெண் சொல்கின்றாள்.
                                ‘பெண் குழந்தை என்றால்
                                புpறப்பதற்கு சற்று தாமதமாகும் என்று
                                மனதில் என்ன தயக்கமோ அதற்கு,
                                இந்த மண்ணில் வந்து விழுவதற்கு,
                                விட்டேத்தியாக வெட்டியான் சொல்கின்றான்.
                                ‘பெண் பிணம் என்றால்
                                சீக்கிரம் வெந்துவிடும்
                                வேலை சுளுவாய் முடிந்துவிடும்
                                ஏன் முடியாது?
                                அவர்கள் தான் வாழுகின்ற
                                நாட்களிலேயே பாதி வெந்துவிடுகிறார்களே!”
                இவ்வாறாக, பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் வாழும் பெண்கள் வாழ்க்கையை தன் அனுபவ மொழிகள் மூலம் கையாண்டுள்ளார்.
                                “பெண்ணே!
                                நிமிர்வது திமிரல்ல,
                                குனிவது தீர்வல்ல,
                                நீ  நிமிர்;!”
என்று பெண்ணினத்திற்கு ஆணையிடும் அவர்,
                                “வாளாதிருந்தது போதும்
                                நாம் வாளாய் இருப்பதே நியாயம்
என்றும் சவால் விடுகிறார். “பெண்ணின் இன்றைய அவலத்தை உணர்த்தவும், அவலங்களுக்கான காரணங்களைக் கூறவும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளைச் சொல்லவும், இந்த விழிப்புணர்வைத் தடம்பிடித்து முன்னேறவும் தூண்டுகிற எழுத்துதான் பெண்ணிய எழுத்து (இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் கவிதை, . 250) இத்தகு பெண்ணிய எழுத்தினை ஆற்றலோடும் திறனோடும் கையாண்டுள்ளனர் பெண் கவிஞர்கள்.